VEDA கல்வி நிலையத்தின் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும்
VEDA கல்வி நிலையத்தில் கடந்த 29ம் திகதி (2023.01.29) ஞாயிற்றுக் கிழமை மாலை 4.40 மணியளவில் தற்காலிகத் தலைவர் திரு.N.ரஞ்சித் ஜெகமோகன் தலைமையில் இறை வணக்கத்துடன் பொதுக் கூட்டம் ஆரம்பமானது.
VEDAகல்வி நிலையத்தின் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் 2023
VEDAகல்வி நிலையத்தில் கடந்த 29ம் திகதி (2023.01.29) ஞாயிற்றுக் கிழமை மாலை 4.40 மணியளவில் தற்காலிகத் தலைவர் திரு.N.ரஞ்சித் ஜெகமோகன் தலைமையில் இறை வணக்கத்துடன் பொதுக் கூட்டம் ஆரம்பமானது.
அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாக சபைத் தெரிவு இடம்பெற்றது. முதலாவதாக புதிய செயலாளராக திரு.T.அமலன் அவர்களை திரு.T.பிரணவன் முன்மொழிய திரு.S.அரவிந்தன் அவர்கள் ஆமோதித்தார். அதனைத் தொடர்ந்து புதிய தலைவராக திரு.M.சண்முகன் அவர்களை செல்வி.K.சந்திரகுமாரி முன்மொழிய திரு.N.ரஞ்சித் ஜெகமோகன் அவர்கள் ஆமோதித்தார். தொடர்ந்து திரு.S.சிவரூபன் அவர்கள் பொருளாளராக திரு.T.பிரணவன் ஐ முன்மொழிய திரு.N.ரஞ்சித் ஜெகமோகன் அவர்கள் ஆமோதித்தார்.
அதனைத் தொடர்ந்து பின்வரும் நிர்வாக உறுப்பினர்கள் புதிதாக தெரிவு செய்யப்பட்டனர்.
நிர்வாக உறுப்பினர்கள்
l திரு.N.ரஞ்சித் ஜெகமோகன்
l திரு.S.சிவரூபன்
l திருமதி.S.முருகவேல்
l திரு.A.மனோகரன்
l திரு.S.மதுசூதனன்
l திரு.R.விதுசன்
புதிய நிர்வாக சபைத் தெரிவினைத் தொடர்ந்து VEDAகல்வி நிலையத்தின் கடந்தகால செயற்பாட்டு அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் பற்றி மிக விரிவாக ஆராயப்பட்டது.
நிறைவாக புதிய செயலாளரால் நன்றியுரையுடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
நன்றி