News

Below you can find some news about our organization.

வல்வை மாணவர்களின் க.பொ.த உயர் தர கணித விஞ்ஞான வகுப்புகளிற்கான நிதிக்கோரிக்கை

பிரசுரிக்கப்பட்ட திகதி: 30/05/2023 (செவ்வாய்க்கிழமை)

வல்வை மாணவர்களுக்கு உயர்தர கணித விஞ்ஞான வகுப்புக்கள் நீண்டகாலம் வல்வையில் இயங்காத நிலையில் 2015 ஆண்டு VEDA கல்வி நிலையத்தில் இவ்வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது. இதன்மூலம் பல வல்வை மாணவர்கள் கணித விஞ்ஞான துறைகளில் உயர்கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை பெற்றுள்ளனர். இவையாவும் வல்வை மக்கள் மற்றும் வல்வை நலன்புரி சங்கங்களில் பங்களிப்பினாலேயே நடைபெற்றது.

 

 அன்பான வல்வை மக்களுக்கு,

வல்வை மாணவர்களின் .பொ.த உயர் தர கணித விஞ்ஞானவகுப்புகளிற்கான நிதிக்கோரிக்கை

  மாணவர்களின் தொடர்ச்சியான கல்வி வளர்ச்சிக்கு வல்வையில் உயர்தர கணித விஞ்ஞானவகுப்புக்களை நடாத்த வேண்டுமெனப் பெற்றோர்கள்,மாணவர்கள் விடுத்த தொடர்ச்சியான வேண்டுகோளுக்கு இணங்க 2015 ஆம் ஆண்டு VEDAகல்வி நிலையத்தில் உயர்தர கணித விஞ்ஞானவகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை பல இடர்பாடுகளுக்கு மத்தியிலும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இதுவரை க.பொ.த (உ/த) இல் கல்வி கற்ற மாணவர்களில் பெரும்பாலானோர் சித்தியடைந்து உயர்கல்வி மற்றும் தொழில் வாய்ப்பினையும் பெற்றுள்ளனர்.

     கடந்த ஆண்டும்   கணித விஞ்ஞானஉயர்தரத்தில் எமதுமாணவர்கள் சராசரியாக 63% சித்திவீதத்தை (பல்கலைக்கழக அனுமதிக்கானதகுதி)பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். எதிர்வரும் ஆண்டுகளிலும் உயர்தர கணித விஞ்ஞானதுறைகளை தெரிவு செய்யும் வல்வை மாணவர்களின் எண்ணிக்கை உயர்வாக காணப்படுவதனால் இவ் உயர்தர கணித விஞ்ஞானவகுப்புக்களைத் தொடர்ந்து நடாத்தவேண்டிய கட்டாய

சூழ்நிலையானது VEDAகல்வி நிலையத்திற்கு காணப்படுகின்றது.

உயர்தரத்தில் இதுவரை காலம் கல்வி  கற்ற மாணவர்களின் சித்திவீதமும் மற்றும் கற்று கொண்டிருக்கும் மாணவரிகளின் விபரமும் வருமாறு.

பிரிவு

மொத்த மாணவர் எண்ணிக்கை

மூன்று பாடங்களிலும்

சித்தியடைந்த

மாணவர் எண்ணிக்கை

சித்தி வீதம்

பல்கலைக் கழகம்

தெரிவானோர்

எண்ணிக்கை

 

ஏனைய  உயர் கல்வி மற்றும் தொழில் துறையை தெரிவு செய்தோர் விபரம்

A/L(2018)

15

13

87%

07

07

A/L(2019)

12

12

100%

07

01

A/L(2020)

14

11

79%

03

01

A/L(2021)

08

05

63%

01

03

A/L(2022)

23

பரீட்சை பெறுபேற்றை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்

A/L(2023)

15

தற்போது கல்வி கற்றுக்கொண்டிருக்கின்றனர்

A/L(2024)

19

 

 

 

VEDAகல்வி நிலையத்தில்  உயர்தர கணித விஞ்ஞான வகுப்புகளை தொடர்ந்து நடாத்த வேண்டி இருப்பதற்கான  காரணங்கள்.

  • ஹாட்லி கல்லூரி,  மெதடீஸ்ட் கல்லூரி,   நெல்லியடி மத்திய கல்லூரி ஆகிய கல்லூரிகளில் கல்வி கற்கும் வல்வை மாணவர்கள் பாடசாலை முடிந்து வீடு வந்து உயர்தர  கணித விஞ்ஞான  வகுப்புக்களுக்கு  தொலைதூரம்(நெல்லியடி, கரவெட்டி, பருத்தித்துறை)  சென்று  கல்வி கற்பதில் இடர்பாடுகளை எதிர் கொள்கின்றனர். (குறிப்பாக பெண் பிள்ளைகள்)
  • தற்காலத்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற சூழ்நிலை மற்றும் எரிபொருள் போக்குவரத்துப் பிரச்சினைகளால் அதிகளவான பெண் பிள்ளைகள் தொலைதூரம் சென்று கல்வி கற்பதில் பெருமளவான இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர்.
  • ஏனைய தனியார் கல்வி நிலையங்களில் ஒரு பிரிவில் மட்டும் 300க்கு மேற்பட்ட   மாணவர்கள் கல்வி கற்கின்றனர் .எமது கல்வி நிலையத்தில் குறைந்தளவு மாணவர்கள் கல்வி கற்பதனால் மாணவர்கள் தமது சந்தேகங்களை இலகுவாக ஆசிரியருடன்  கலந்துரையாட முடிகின்றமை மற்றும் போதுமான விளக்கங்களைப் பெறக்கூடியதாய் இருக்கின்றமை.

குறிப்பு:

  • VEDAகல்வி நிலையத்தில்  கணித விஞ்ஞானப் பிரிவைத் தொடர்ந்து  நடாத்தாவிடின் வல்வை மாணவர்கள் கலை, வர்த்தகப் பிரிவுகளையே அதிகம் தெரிவு செய்வார்கள் . இந்நிலைமை தான் ஏற்கனவே இங்கு காணப்பட்டது. இதனால் எதிர்வரும் காலங்களில்   கணித விஞ்ஞானப் பிரிவினைத் தெரிவு செய்யும் மாணவர்களின்(பெண் பிள்ளைகளின்)எண்ணிக்கை குறைவடையும்.

மேலும் தற்போது க.பொ.த (சா/த) பரீட்சை 29.05.2023 தொடக்கம் 09.06.2023 முடிவடைய இருப்பதனால்   இவர்களுக்குரிய உயர்தர (A/L -2025) கணித,விஞ்ஞானபிரிவு 10.06.2023 அன்று ஆரம்பிக்க படவேண்டிய கட்டாயநிலைமை காணப்படுகின்றது(ஏனைய கல்வி நிறுவனங்களில் இத்திகதியில் உயர்தர பிரிவுகள் ஆரம்பிக்கப்பட இருப்பதனால்). அதேநேரம் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளும் சற்று அதிகரித்து கொடுக்க வேண்டிய  நிலைமையும் காணப்படுகின்றது.( விபரம் கீழே ).  கடந்த கால அனுபவங்களின் படி அண்ணளவாக 15 மாணவர்கள் கணித,விஞ்ஞானபிரிவிற்கு VEDAகல்வி நிலையத்தில் கல்வியைத் தொடர்வார்கள் என்ற எதிர்பார்ப்பில்,புதிய பிரிவிற்கான எதிர்பார்க்கப்படும் செலவீனங்கள்  கீழே கணக்கிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

புதிய உயர்தர வகுப்பு A/L(2025)   இற்குரிய செலவீனங்கள் மற்றும்             தேவைப்படும் மேலதிக நிதியின் விபரம் வருமாறு.

ஆசிரியர்கள் விபரம்விபரம்

மாதாந்த கொடுப்பனவு/ரூபா

திரு.ஜெயமோகன் (இணைந்த கணிதம்)

15,000.00

திரு.பிரபாகரன்  (இணைந்த கணிதம்)

15,000.00

திரு.நித்தியானந்தன்  (உயிரியல்)

25,000.00

திரு.அரவிந்தன்  (இரசாயனவியல்)

25,000.00

திரு.செந்தூரன்  (பெளதிகவியல்)

15,000.00

திரு.உயிரோவியம்  (பெளதிகவியல்)

15,000.00

மொத்தம்

90,000.00

மாணவர்களிடமிருந்து கிடைக்கும் பணம்

(15 X 2600)

 (39,000.00)

 

மாதாந்தம் தேவைப்படும் நிதி

  (90,000.00 - 39,000.00 )

51,000.00

 

நிர்வாகச் செலவீனம் 

15,000.00

மொத்தமாக தேவைப்படும் நிதி (15,000.00+51,000.00)

66,000.00

 

  • புதிய A/L(2025) நடாத்துவதற்கு மேலதிகமாக மாதாந்தம் ரூபா66,000.00 தேவைப்படும்.

 

 குறிப்பு :

  •  தற்போது வல்வை நலன்புரிச் சங்கம் பிரித்தானியா (VNS  UK)ஆல்VEDAகல்வி நிலையத்திற்கு ரூபா200,000.00 மாதாந்தம் வழங்கப்பட்டுவருகின்றது. அதில்  ரூபா120,000.00 தரம் 06 தொடக்கம்  க.பொ.த சாதாரண தரம் வரை உள்ள ஆசிரியர்கள் கொடுப்பனவிற்கும் நிர்வாக செலவீனத்திற்கும் பயன்படுத்தப்படுவதுடன் ரூபா 80,000.00 மட்டுமே தற்போது நடைபெற்று வரும் க.பொ.த. உயர்தர பிரிவிற்கான ஆசிரியர்   கொடுப்பனவிற்கு பயன்படுத்தப்படுகின்றது. (அப்பிரிவுகளுக்கும் ரூபா 48,400.00 மாதாந்தம் பற்றாக்குறையாக காணப்படுகின்றது ).
  • அன்புடையீர்!

 எம்மால் மேலே குறிப்பிடப்பட்ட விபரங்கள் யாவும் போதுமானவை  என நம்புகின்றோம். புதிய A/L(2025)வகுப்புக்கள் யூன் 10 திகதி ஆரம்பிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை காணப்படுவதால் இப்புதிய பிரிவிற்கு மாதாந்தம்  தேவைப்படும் ரூபா  66,000.00 இனை  இப்பிரிவு மாணவர்கள் பரீட்சை எழுதும் வரை ( 30 மாதங்கள்-முழுமையாக/பகுதியாக ) வல்வை மக்களாகிய நீங்கள் இந்நிதியினை தந்து உதவினால் மட்டுமே எங்களால் இவ் உயர்தரப் பிரிவினை குறித்த திகதியில் ஆரம்பிக்க முடியும் என்பதுடன் இந்த நிதிப்பங்களிப்புக் கிடைக்காது போனால்எதிர்வரும் காலங்களில் VEDAகல்வி நிலையத்தில் க.பொ.த. உயர்தர கணித,விஞ்ஞானப் பிரிவினை நடாத்தமுடியாதுள்ளது என   பகிரங்கமாக அறிவிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை VEDA நிறுவனத்திற்கு ஏற்படும் என்பதனை மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எமது தாய் மண்ணின் மைந்தர்களாகிய நீங்கள் எம்பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு செயற்படுவீர்கள் என்பதனை வல்வை மாணவர்களும் ,VEDA சமூகமும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.

    வங்கிக்கணக்கிலக்கம்  

Name – Valvai Educational Development Association

Bank – Peoples Bank, Valvettithurai.                                

Account No – 141-2-001-5-0031501