News

Below you can find some news about our organization.

VEDA கல்வி நிலையமானது 11வது ஆண்டில் தனது காலடி எடுத்து வைக்கின்றது

பிரசுரிக்கப்பட்ட திகதி: 09/10/2021 (சனிக்கிழமை)

VEDA கல்வி நிலையமானது ஆரம்பிக்கப்பட்டு 2021.09.29ம் திகதியுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்து பதினோராவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது.

 

VEDA கல்வி நிலையமானது ஆரம்பிக்கப்பட்டு 2021.09.29ம் திகதியுடன்10 ஆண்டுகள் நிறைவடைந்து பதினோராவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது. இக்கல்வி நிலையமானது ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் இன்று வரை தனது கல்விச் சேவையை வல்வை மாணவருக்கு அர்ப்பணிப்புடன் வழங்கி வருகின்றது.

உயர்தரகணித,விஞ்ஞான வகுப்புக்களில்(A/L 2018 &A/L 2019 & A/L 2020) 41 மாணவர் பரீட்சை  மேலும் எமது VEDA கல்வி நிலையம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை (10 ஆண்டுகள்) க.பொ.த சாதாரண பரீட்சைக்கு 297 மாணவர் தோற்றி அதில் 286 மாணவர்கள் உயர்தர கல்வியைத்தொடர்வதற்கான தகுதியைப் பெற்று(96%) எமது கல்வி நிலையத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். அதேவேளை எமது VEDA கல்வி நிலையத்தில் கல்வி பயின்ற க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றி அதில் 36மாணவர் பல்கலைக்கழகத்துக்குவிண்ணப்பிக்க தகுதியைபெற்றுள்ளதுடன்எமதுகல்வி நிலையத்தில் உயர்தர கணித. விஞ்ஞான பிரிவின் ஊடாக கல்வி கற்ற மாணவர்கள் பலர் பல்கலைக்கழகங்கள். கல்வியியற் கல்லூரி, தொழில் பயிற்சி துறைகள் மற்றும் அரச வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன்எமதுVEDAகல்வி நிலையத்தின் இவ் 10 வருடகால வெற்றிகரமான வளர்ச்சிக்கு எம்முடன் தோளோடு தோள் நின்று தொடர்ச்சியான பங்களிப்பு செய்து வரும் வல்வை நலன்புரிச் சங்கம் -பிரித்தானியா மற்றும் தமது பங்களிப்புக்களை வழங்கிய  வல்வை நலன்புரிச் சங்கம் - அவுஸ்ரேலியா,கனடா போன்ற அமைப்புக்கள் இத்துடன் 1973 (Batch)நண்பர் குழுக்கள் 1968 (Batch)நண்பர் குழுக்கள்மற்றும் தனிப்பட்ட கொடையாளர்களும் தமது நிதிப்பங்களிப்புக்களைச் செய்துள்ளனர்.

இனிவரும் காலங்களிலும் “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு”என்ற கருத்திற்கமைவாக நாம் அனைவரும்      ஒன்றாக இணைந்து பயணித்தால் வல்வையின் கல்வித்தரத்தை ஓர் உயரிய நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கையுடன் VEDAகல்வி நிலையம் பதினோராவது ஆண்டில் தனது காலடி எடுத்து வைக்கின்றது.