News

Below you can find some news about our organization.

வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கு நிழல் பிரதி இயந்திரம் (Photocopy Machine) அன்பளிப்பு

பிரசுரிக்கப்பட்ட திகதி: 03/10/2021 (ஞாயிற்றுக்கிழமை)

திருமதி விமலாதேவி சண்முகராஜா மற்றும் குடும்பத்தினரால் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை (ஊறணி) க்கு நிழல் பிரதி இயந்திரம் (Photocopy Machine) அன்பளிப்பு

 

வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் நிழல் பிரதி இயந்திரம் (Photocopy Machine) மற்றும்கணினி (Computer) போன்றன நீண்ட கால தேவையாக காணப்பட்டிருந்தது.
 
இந்த தேவையை பூர்த்தி செய்வதற்காக அவுஸ்ரேலியா (Australia) வாழ் திருமதி விமலாதேவி சண்முகராஜா அவர்களும் அவர்களது பிள்ளைகளும் இணைந்து ரூபா 175,000 (ஒரு இலட்சத்து எழுபத்தையாயிரம்) பெறுமதியான நிழல் பிரதி இயந்திரத்தினை முதற்கட்டமாக வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கு அன்பளிப்புச் செய்திருந்தனர்.   
 
இவ்நிழல் பிரதி இயந்திரத்தினை (Photocopy Machine) வைத்தியசாலை நலன் புரிச்சங்கத்தின்  உறுப்பினரான திரு.து.சக்திவேல்  அவர்கள் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியிடம் 27.09.2021 அன்று உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
 
மேலும் இதன் அடுத்த கட்டங்களாக இவர்களது கோரிக்கையான கணினி அன்பளிப்பாக வழங்கப்படுவதோடு ஏற்கனவே பாவனையில் இருந்து பழுதடைந்த நிழல் பிரதி இயந்திரத்தை (Photocopy Machine) திருத்திக்கொடுப்பதற்கும் திருமதி விமலாதேவி சண்முகராஜா அவர்களும் அவர்களது பிள்ளைகளும்முன்வந்துள்ளார்கள். இவர்களுக்கு பிரதேச வைத்தியசாலை நிர்வாகம், வைத்தியசாலை நலன்புரிச்சங்கம் மற்றும் வல்வை மக்களும் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றன.
 
இக்கோரிக்கையினை உரியவர்களுக்குத் தெரியப்படுத்தி இவ்இயந்திரத்தினை பெற்றுக்கொடுப்பதற்கு தொடர்புபடுத்தும் முயற்சியில்  VEDA கல்வி நிலையம் தனது பங்களிப்பினை வழங்கி இருந்தது.
 
இவ்வாறான பல்வேறுபட்ட அத்தியாவசிய கோரிக்கைகள் வருகின்ற போது புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்களால் முடிந்தளவு பங்களிப்புகளை வழங்கி இவ்வாறான தேவைகளை நிறைவேற்றமுடியும். இதற்கு VEDA என்றும் துணைநிற்கும்.