VEDA கல்வி நிலையத்தின் க.பொ.த (சா.த) 2020 பெறுபேறுகள்
2020 ஆம் ஆண்டு க.பொ.த (சா.த) பரீட்சையில் 40 மாணவர்கள் சித்தி
VEDA கல்வி நிலையத்தில் கல்வி பயின்ற42 மாணவர்கள் கடந்த2020ஆம் ஆண்டிற்குரிய க.பொ.த(சா/த) பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். அவர்களில்40 மாணவர்கள் க.பொ.த(சா/த) பரீட்சையில் சித்தி அடைந்து க.பொ.த(உ/த) கல்வியைத் தொடர்வதற்கு தகுதி பெற்றுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். VEDA கல்வி நிலையத்தின் அதிசிறந்த பெறுபேறாக 9Aசித்தியினை செல்வன்.J.கலைப்பிரியன், செல்வன்S.சந்தோஸ்ஆகிய இரு மாணவர்களும்செல்வி.S.நதுஷா எனும் மாணவி கர்நாடக சங்கீதம் முடிவுறாத நிலையில் ஏனைய அனைத்து பாடங்களிலும்(8A)சித்தியும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
VEDA கல்வி நிலையத்தில் க.பொ.த (சா/த) வரை கல்வி கற்று எமது கல்வி நிலையத்திற்கு பெருமையினை தேடித்தந்த மாணவர்களுக்குVEDA கல்வி நிலையம் தனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது. அத்துடன் அவர்களின் கல்வி செயற்பாட்டிற்கு உறுதுணையாகஇருந்து செயற்பட்ட பெற்றோருக்கும், இவர்களின் கல்வி முன்னேற்றத்தில் பாரிய பங்களிப்பினை வழங்கிய ஆசிரியர் குழாமிற்கும் VEDA கல்வி நிலையம் தனது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் VEDA கல்வி நிலையம் இயங்குவதற்கு நிதி மற்றும் ஆலோசனைகளை வழங்கி வல்வையின் கல்வி முன்னேற்றத்திற்கு பாடுபட்டு, முன்னேற்றத்தினை ஏற்படுத்திய வல்வை நலன்புரிச் சங்கங்கள் மற்றும் வல்வையின் நலன்விரும்பிகள் அனைவருக்கும் VEDA கல்வி நிலையம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது

