VEDA கல்வி நிலையத்தில் கல்வி கற்ற க.பொ.த (சா/த) மாணவர்கள் அனைவரும் க.பொ.த (உ/த) இற்கு தகுதி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 30/03/2019 (சனிக்கிழமை)
VEDA கல்வி நிலையத்தில் கல்வி கற்று கடந்த 2018 ஆம் ஆண்டு க.பொ.த (சா/த) பரீட்சைக்கு 28 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்கள் அனைவரும் (100% சித்தி) க.பொ.த (உ/த) கல்வியைத் தொடர்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
VEDA கல்வி நிலையத்தில் கல்வி கற்று கடந்த 2018 ஆம் ஆண்டு க.பொ.த (சா/த) பரீட்சைக்கு 28 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்கள் அனைவரும் (100% சித்தி) க.பொ.த (உ/த) கல்வியைத் தொடர்வதற்கு தகுதி பெற்றுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
மேலும் எமது VEDA கல்வி நிலையத்தில் தமிழ், சமயம், கணிதம், வரலாறு, வர்த்தகம், புவியியல், ICT, கடல்வளம் ஆகிய பாடங்களில் 100% சித்தி வீதத்தினையும் விஞ்ஞான பாடத்தில் 96.4% சித்தி வீதத்தினையும் ஆங்கில பாடத்தில் 89.3% சித்தி வீததினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
VEDA கல்வி நிலையத்தில் க.பொ.த (சா/த) வரை கல்வி கற்று வல்வை மண்ணிற்கும் எமது VEDA கல்வி நிலையத்திற்கும் பெருமையினை தேடித்தந்த மாணவர்களுக்கு VEDA கல்வி நிலையம் தனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது. அத்துடன் அவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கு உறுதுணையாக இருந்து செயற்பட்ட பெற்றோருக்கும், இவர்களின் கல்வி முன்னேற்றத்தில் முக்கிய கவனமெடுத்து பாரிய பங்களிப்பினை வழங்கிய ஆசிரியர் குழாமிற்கும் VEDA கல்வி நிலையம் தனது மனப்ப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் VEDA கல்வி நிலையம் இயங்குவதற்கு நிதி மற்றும் ஆலோசனைகளை வழங்கி வல்வையின் கல்வி முன்னேற்றத்திற்கு பாடுபட்டு, முன்னேற்றத்தினை ஏற்படுத்திய வல்வை நலன்புரிச் சங்கங்கள் மற்றும் வல்வையின் நலன்விரும்பிகள் அனைவருக்கும் VEDA கல்வி நிலையம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.
க.பொ.த (சா/த) கல்வியை VEDA கல்வி நிலையத்தில் வெற்றிகரமாக பூர்த்தி செய்து க.பொ.த (உ/த) கல்வியை தொடர்வதற்காக செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் க.பொ.த (உ/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று மேற்படிப்பினை தொடர்ந்து வல்வை மண்ணுக்கு பெருமையினை பெற்றுக் கொடுக்க VEDA கல்வி நிலையம் இறைவனின் நல்லாசியை வேண்டி நல்வாழத்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.