நிர்வாகக்குழு (Executive Committee) - 2020
| President: | Mr. M.Shanmuhan |
| Secretary: | Miss. K.Chandrakumari |
| Treasurer: | Mr. T.Pranavan |
| Committee Members: |
Mr. N. Ranjith Jegamohan
Mr. S. Mathusoothanan
Mr. S.Sivaroopan
Mrs. S. Murugavel
Mr. M.Rameswaran
Mr. M.Manokaran
|
VEDA கல்வி நிலையத்தின் நோக்கம்
கல்வித்துறையில் சிறந்து விளங்கிய எமது வல்வை பிரதேசமானது கல்வித்துறையில் வீழ்ச்சி அடைந்த கால கட்டங்களில் வல்வை மாணவர்களினதும் அதனை அண்மித்த பிரதேச மாணவர்களினதும் கல்வித்தரத்தினை உயர்த்தவும் க.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் சித்தி வீதத்தினை உயர்த்தவும் 2011ம் ஆண்டு வல்வை மக்களின் கல்வியில் அக்கறை கொண்டவர்களின் ஆதரவுடன் VEDA கல்வி நிலையம் 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
பதிவு செய்யப்பட்ட ஒரு கல்வி நிலையம்.
எமது கல்வி நிலையமானது பருத்தித்துறை பிரதேச செயலக சமூக சேவை திணைக்களத்தின் கீழ் ஒரு சமூக சேவை நிறுவனமாக 2015.09.29ம் திகதி பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பதிவுச்சான்றிதழ் இலக்கம் DS/VADA/N/SS/VOR/2011/81 ஆகும்.
2011 – 2019 வரையான காலங்களில் மாணவர்களின் எண்ணிக்கை
VEDA கல்வி நிலையம் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் தரம் 09 – 11 வரையான வகுப்புகளில் 35 மாணவர்களே கல்வி கற்றனர். அதன் பின்னர் 2014 ஆம் ஆண்டு வல்வை மாணவர்களின் பெற்றோர்கள், நலன்விரும்பிகளின் வேண்டுகோளுக்கிணங்கவும் தரம் 09 மாணவர்களின் கல்வி தரத்தினை உயர்த்தவும் தரம் 06 – 08 வரையான வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன் பின்னர் உயர்தர கல்விக்காக தொலைதூரம் செல்ல வேண்டி உள்ள காரணத்தாலும், பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு நோக்கம் கருதியும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களின் வேண்டுகோளுக்கு இணங்க க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான கணித, விஞ்ஞான துறைகளுக்கான வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
அதன் பின்னர் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்த்தன் காரணமாகவும் ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் மட்டும் இருந்து கற்றல் செயற்பாட்டில் ஈடுபட முடியும் என்பதாலும் 2016 ஆம் ஆண்டு தரம் 06 – 08 வரையான வகுப்புகளை “A”, “B” என இரு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டும் 2017 ஆம் ஆண்டு தரம் 09, 10 வரையான வகுப்புகளை “A”, “B” என இரு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டும். 2019 ஆம் ஆண்டு தரம் 11 வகுப்பினை “A”, “B” என இரு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டும் இன்று வரை சிறப்பாக இயங்கி வருகின்றது.
2011 – இன்றுவரை மாணவர்களின் தொகை வருமாறு:
|
ஆண்டு |
மாணவர்களின் எண்ணிக்கை |
|
2011 |
35 |
|
2012 |
81 |
|
2013 |
155 |
|
2014 |
229 |
|
2015 |
217 |
|
2016 |
343 |
|
2017 |
394 |
|
2018 |
412 |
|
2019 |
455 |
நடுத்தவணைப்பரீட்சைகளும், தவணைப்பரீட்சையும்
எமது கல்வி நிலையம் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டங்களில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் நடுத்தவணைப்பரீட்சையானது பாட ஆசிரியர்களால் வினாத்தாள்கள் தொகுக்கப்பட்டும், தவணைப்பரீட்சைகளானது வடமராட்சியில் புகழ்வாய்ந்த வினாத்தாள் வெளியீட்டகத்தினர்களான தனு, ரதி வெளியீட்டகத்தினரிடமிருந்து வினாத்தாள்கள் பெறப்பட்டு பரீட்சைகள் நடைபெற்று வருகின்றது.
தொகுதிப் பாடங்களுக்கான வகுப்புகள்
தரம் 10, 11 மாணவர்களுக்கான தொகுதிப்பாடங்களான வர்த்தகம், புவியியல், தகவல் தொழில்நுட்பம், கடல்வளம் ஆகிய பாடங்கள் எந்தவொரு தனியார் கல்வி நிலையத்திலும் நடைபெறாத சூழ்நிலையிலும் வல்வை மாணவர்களின் கல்வியில் அக்கறை கொண்டு தொகுதிப்பாடங்களும் எமது கல்வி நிலையத்தில் எந்தவித மேலதிக கட்டணங்களும் இன்றி நடைபெறுகின்றது.
க.பொ.த (சா/த) பரீட்சையில் சித்தி (உயர்தர தகுதி)
நமது VEDA கல்வி நிலையத்தில் ஒவ்வொரு ஆண்டும் க.பொ.த (சா/த) வகுப்புக்களில் கல்வி பயிலும் அனேகமான மாணவர்கள் க.பொ.த (உ/த) வகுப்புக்களில் கல்வியினைத் தொடர்ந்து கற்பதற்குத் தகுதி பெறுகின்றனர்.
பெற்றோர், ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான கலந்துரையாடல்
எமது VEDA கல்வி நிலையத்தில் ஒவ்வொரு தவணையும் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் நடைபெறுவது வழமை. கலந்துரையாடலில் மாணவர்களின் கல்வியை மேலும் எவ்வாறு மேம்படுத்தலாம் எனவும் அவர்களுக்கு எவ்வாறான கற்றல் அணுகுமுறையை செய்யலாம் எனவும் கலந்துரையாடப்படும். நடைபெறுகின்ற கலந்துரையாடலில் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொள்வார்கள். அவர்கள் கலந்து கொள்வது VEDA கல்வி நிலையத்தின் உன்னதமான கல்விச்சேவையினை பெற்றோர்கள் உணர்ந்து கொண்டமையே ஆகும். இவ்வாறான கலந்துரையாடல் எந்தவொரு தனியார் கல்வி நிலையத்திலும் நடைபெறுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
புலமைப் பரிசு
தவணைப் பரீட்சையில் குறித்த சதவீதத்திற்கு மேல் புள்ளி பெறும் மாணவர்களுக்கு மாதாந்த கட்டணத்தில் சலுகை வழங்குவதாக 2015 ஆம் நடைபெற்ற முதலாவது தவணைக்கான கலந்துரையாடலில் அறிவித்திருந்தோம். அந்த வகையில் தரம் 06, 07, 08 மாணவர்கள் பிரதான ஆறு பாடங்களில் 80 சதவீதமும், தரம் 09,10,11 மாணவர்கள் 75 சதவீதத்தினையும் பெறும் பட்சத்தில் அவர்கள் அடுத்து வரும் 3 மாதங்கள் மாதாந்த கட்டணத்தை சலுகையாக பெறுவார்கள்.
2011 தொடக்கம் 2019 வரையான காலப்பகுதியில் ஆசிரியர்கள் பற்றிய விபரங்கள்
ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு ஆசிரியரே கற்றல் செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தார். ஆனால் 2014 ஆம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு பாடத்திற்கும் இரண்டு ஆசிரியர்கள் வீதம் கற்றல் செயற்பாடுகளை மேற்கொண்டனர். அதிகளவான மாணவர்களை உள்வாங்கியதன் காரணமாக வகுப்புகளை இரண்டு பிரிவுகளாக பிரிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே தரம் 06 தொடக்கம் 11 வரையான வகுப்புகள் “A”, “B” என பிரிக்கப்பட்டது. புதிய வகுப்புகள் ஆரம்பித்ததால் கணிதம், ஆங்கிலம் ஆகிய இரண்டு பாடங்களிற்கு 3 ஆசிரியர் வீதமும் விஞ்ஞான பாடத்திற்கு 4 ஆசிரியர் வீதமும் மற்றைய பாடங்களுக்கு இரண்டு ஆசிரியர்கள் வீதமும் கற்றல் செயற்பாடுகள் நடைபெறுகின்றது. தற்பொழுது VEDA கல்வி நிலையத்தில் 25 ஆசிரியர்கள் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர்.
கௌரவிப்பு விழா
VEDA கல்வி நிலையம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து உயர்தரத்திற்கு தகுதி பெற்ற மாணவர்களையும் அவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர்களும் கௌரவிக்கும் முகமாக மாணவர்களுக்கு கௌரவிப்புச் சின்னமும் ஆசிரியர்களுக்கு பரிசில்களும் வழங்கப்படுவது வழமையாகும்.
கல்வி சாரா நடவடிக்கைகள்
எமது VEDA கல்வி நிலையத்தில் கற்றல் நடவடிக்கைக்கு மட்டும் முன்னுரிமை வழங்காது மாணவர்களின் கல்விசாரா நடவடிக்கைக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் ஆண்டு தோறும் மாணவர்களால் ஆசிரியர்தின விழாவும் விஜயதசமி விழாவும் கொண்டாடப்படுகின்றது. இவ்வாறான விழாக்கள் மூலம் மாணவர்களின் ஒழுக்க விழுமியங்கள் வளர்க்க கூடியதாகவும் உள்ளது.
இலவசக் கல்வி
வறுமை காரணமாக தனியார் கல்வி நிலையம் சென்று கல்வியைத் தொடர முடியாத மாணவர்கள் எமது கல்வி நிலையத்தில் மாதாந்தக்கட்டணம் செலுத்தாமல் கல்வி கற்று வருகின்றனர். வறுமை கற்றலுக்கு தடையாக இருக்ககூடாது என்ற நல்லெண்ண நோக்கிலே இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வல்லை நலன்புரிச்சங்கம் பிரித்தானியாவின் நிதிப்பங்களிப்பு
VEDA கல்வி நிலையம் பகுதியளவில் சேவை நோக்கம் கொண்ட கல்வி நிலையம் என்பதால் மாணவர்களின் கட்டணத்தினை மட்டும் கொண்டு ஆசிரியர்களுக்கான வேதனத்தையும் அலுவலக செலவுகளையும் செய்யமுடியாத இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது. இதனை சீர்செய்வதற்காக வல்வை நலன்புரிச்சங்கம் (பிரித்தானியா) 2013 வைகாசி மாதம் முதல் மாதாந்த அன்பளிப்புகளை வழங்குவதாக எமக்கு ஒப்பந்தம் செய்திருந்தது. 2014 ஆம் ஆண்டு வரை கோரப்படும் நிதியினை எமக்கு அவர்கள் தந்துதவினார்கள். ஆனால் 2014 ஆம் ஆண்டு தொடக்கம் மாதாந்தம் 100, 000 (ஒரு லட்சம்) ரூபாவினையும் மற்றும் உயர்தர கணித, விஞ்ஞான வகுப்பிற்கான (A/L 2020) நடாத்துவதற்கான அன்பளிப்பாக மாதாந்தம் ரூபா 40,000 இனையும் எமக்கு அன்பளிப்பு ஆக வழங்கி வருகின்றனர். இவர்களது சேவைக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
வல்லை நலன்புரிச்சங்கம் அவுஸ்ரேலியாவின் பங்களிப்பு
VEDA கல்வி நிலையத்தில் ஆங்கில கல்வியை மேம்படுத்தவும் எதிர்வரும் ஆண்டுகளில் கற்றல் முறைகளின் மாற்றங்களுக்கு மாணவர்களை இலகுவாக நெறிப்படுத்தவும், ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம், கடல்வளம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் மாணவர்களை இலகுவாக வழிகாட்ட தேவையான உபகரணங்களான Multimedia Projecter, Screen, போட்டோ பிரதி இயந்திரம் என்பவற்றினை வல்வை நலன்புரிச்சங்கம் (அவுஸ்ரேலியா) வழங்கி உள்ளனர். அவர்களுக்கு எமது கல்வி நிலையம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
புதிய நிலம் கொள்வனவு செய்வதற்கான அன்பளிப்பு
தற்பொழுது வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கமானது தனியார் வாடகை வீடுகளில் மாதாந்த வாடகை செலுத்தி இயங்கி வருகின்றது. வளர்ச்சி அடைந்து வரும் சந்தர்ப்பத்தில் வீட்டின் உரியமையாளர் தனது வீட்டினைத் தனது சொந்தத் தேவைக்காக கோரும் பட்சத்தில் VEDA கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்விச் செயற்பாட்டினை இடைநிறுத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்படும்.
இச்சூழ்நிலையினை நிவர்த்தி செய்வதற்காக VEDA கல்வி நிலையம் புதிய காணி ஒன்றினை கல்வி நிலைய செயற்பாட்டிற்கு கொள்வனவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது யாவரும் அறிந்ததே. அக்கோரிக்கைக்கு இணங்க VEDA கல்வி நிலையத்திற்கு புதிய காணியைக் கொள்வனவு செய்வதற்காக வல்வை மாணவர்களின் நீண்டகால கல்வியில் அக்கறை கொண்ட நலன்விரும்பிகள் தங்களால் முடிந்த நிதியினை வழங்கியுள்ளனர். அவர்களுக்கு VEDA கல்வி நிலையம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.
நிதிப்பங்களிப்பு
VEDA கல்வி நிலையத்திற்கு வல்வை நலன்புரிச்சங்கம் (பிரித்தானியா) தவிர்ந்த நலன்விரும்பிகளும் எமக்கு தங்களால் இயன்ற அன்பளிப்புக்களை வழங்குகின்றனர். அவர்களால் வழங்கப்படும் அன்பளிப்புக்களைக் கொண்டு தளபாடங்களும் கொட்டகைகளும் அமைக்கப்பட்டது. அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
எதிர்கால வல்வை மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்கான சொந்தமான இடம்
தற்பொழுது வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கமானது கொற்றங்கலட்டி, வேவில் ஒழுங்கை, வல்வெட்டித்துறை எனும் முகவரியில் உள்ள தனியார் வாடகை வீடுகளில் மாதாந்த வாடகை செலுத்தி இயங்கி வருகின்றது. வளர்ச்சி அடைந்து வரும் சந்தர்ப்பத்தில் வீட்டின் உரியமையாளர் தனது வீட்டினைத் தனது சொந்தத் தேவைக்காக கோரும் பட்சத்தில் VEDA கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்விச் செயற்பாட்டினை இடைநிறுத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்படும்.
இவ்வாறான பாதிப்புகள் எமது VEDA கல்வி நிலையத்திற்கு ஏற்படாத வண்ணம் வல்வை மாணவர்களுக்குத் தொடர்ந்தும் கல்விச் சேவையினை வழங்க வேண்டும் எனில் VEDA கல்வி நிலையத்திற்கு என சொந்தமான இடம் ஒன்று அவசியமாகும்.